6/27/2010

ஆயிரம் வித்தியாசங்கள்

ஆயிரம் வித்தியாசங்கள்

தமிழ்
ஒரு
செம்மொழிதான்:

.
நடை பாதை
நெரிசலில்
நீலப்பல்  
நங்கை எதிர்கொண்டாள்!

.
நடை பாதை
நெரிசலில்
நீளப் பல்   
நங்கை எதிர்கொண்டாள்!
 

வாழ்க தமிழ்!

வாழ்க தமிழ்!
இன்று செம்மொழி மாநாடு ஆரம்பம்
ஏதாவது செய்ய வேண்டுமே?
உறங்கிய சிங்கம்  (சொல்லவே இல்லை...)  சிலிர்த்து எழுந்தது..
நாமும் பங்களிக்க வேண்டாமா?
கவிதையா? கட்டுரையா? கதையா
என்ன செய்யலாம்?
வரலாற்று நிகழ்வில் நம் பதிவு - நல்ல வாய்ப்பு..
நழுவ விடலாமா?
கவிதையா? கட்டுரையா? கதையா
முடிவு செய்வதற்குள் மாநாடு தொடங்கி.... முதல் நாள் முடிந்தது!
கருவை முடிவு செய்து... கருத்தாக்கம் செய்துவிடலாம்
அவசரம் வேண்டாம் - இன்னும் மூன்று நாட்கள் உள்ளன...
எப்படியும் எழுதிவிடுவேன்
அதுவரை...
மகிழ்ச்சி தொடரட்டும்!
சோகம் வேண்டாம் !!