1/01/2012

திருக்குறள்


அறத்துப்பால்

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும். 

மு.வ : அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்; அடக்கம் இல்லாதிருத்தல், பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில் செலுத்தி விடும். 

சாலமன் பாப்பையா : அடக்கம் ஒருவனைப் பிற்காலத்தில் தேவர் உலகிற்குக் கொண்டு சேர்க்கும்; அடங்காமல் வாழ்வதோ அவனை நிறைந்த இருளுக்குக் கொண்டு போகும். 

Control of self does man conduct to bliss th’ immortals share;
Indulgence leads to deepest night, and leaves him there.
( Kural No : 121 )

Kural Explanation: Self-control will place (a man) among the Gods; the want of it will drive (him) into the thickest darkness (of hell).

புத்தாண்டே வருக வருக!


நல்ல காலம் பொறக்குது!

தொப்பை சுருங்குது; சுறுசு றுப்பு விளையுது;
எட்டு லச்சுமியும் ஏறி வளருது;
பய ந் தொலையுது, பாவம் தொலையுது;
சாத்திரம் வளருது, சாதி குறையுது;
நேத்திரம் திறக்குது, நியாயம் தெரியுது;
பழைய பயித்தியம் படீலென்று தெளியுது;
வீரம் வருகுது, மேன்மை கிடைக்குது.
-பாரதியார்