5/01/2012

I am back....!


I am back..

விலாசம் தொலைத்து
இது நாள்வரை
என் மனைக்கு
வழி தெரியாமல்....

- இது தான் வலையின் விசித்திரம்...

1/01/2012

திருக்குறள்


அறத்துப்பால்

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும். 

மு.வ : அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்; அடக்கம் இல்லாதிருத்தல், பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில் செலுத்தி விடும். 

சாலமன் பாப்பையா : அடக்கம் ஒருவனைப் பிற்காலத்தில் தேவர் உலகிற்குக் கொண்டு சேர்க்கும்; அடங்காமல் வாழ்வதோ அவனை நிறைந்த இருளுக்குக் கொண்டு போகும். 

Control of self does man conduct to bliss th’ immortals share;
Indulgence leads to deepest night, and leaves him there.
( Kural No : 121 )

Kural Explanation: Self-control will place (a man) among the Gods; the want of it will drive (him) into the thickest darkness (of hell).

புத்தாண்டே வருக வருக!


நல்ல காலம் பொறக்குது!

தொப்பை சுருங்குது; சுறுசு றுப்பு விளையுது;
எட்டு லச்சுமியும் ஏறி வளருது;
பய ந் தொலையுது, பாவம் தொலையுது;
சாத்திரம் வளருது, சாதி குறையுது;
நேத்திரம் திறக்குது, நியாயம் தெரியுது;
பழைய பயித்தியம் படீலென்று தெளியுது;
வீரம் வருகுது, மேன்மை கிடைக்குது.
-பாரதியார் 

12/17/2010

தமிழ் வாழ்க - ௨

வாழ்க தமிழ் - ௨

எங்கும் தமிழ் ... எதிலும் தமிழ்!
இன்றைய சென்னை மாணவர்களிடம் 
சில தமிழ் பழ மொழிகளை கொடுத்து
ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கச் சொன்னோம்.
ஒரு மொழியை பல மொழியாக பேசும் மாணவர்களுக்கு பழமொழி தெரியாதா? 
பெயர்த்துவிட்டார்கள் பெயர்த்து!
தமிழ் பழமொழிகளை கண்டுபிடிக்க முடிகிறதா பாருங்கள்.
அதிகம் பெயர்த்தவருக்கு "பழமொழிச் செம்மல்" பட்டம் காத்திருக்கிறது!
( முதல் மூவருக்கு மட்டும் * போன்ற விதிகள் இல்லை... 
எத்தனை நபர்கள் சரியாக சொன்னாலும் அத்தனை பேருக்கும் பட்டம் உண்டு!)

தமிழில் மொழி மாற்றம் செய்யவும்:
 
1. For good cow, one heat.
2. Bad donkey, small wall.
3. Five not bending, fifty also no bend.
4. For crow, its kutty gold kutty.
5. For elephant also leg slips.
6. Study handful dust size, no study world size.
7. Ant move, stone melt.

போதுமடா சாமி! 
அலை பேசியில் குறுந்தகவல் 
அனுப்பும் மாணவச் செல்வங்களே 
தமிழ் தகவல் நுண்பொருள் 
பக்கம் போய் பாருங்கள் 
நன்றாக தேர்ச்சி பெறுங்கள் 
அதுவரை ...
தமழ் தானாக வளரட்டும்!

தமிழ் வாழ்க!

வாழ்க தமிழ்!

எங்கும் தமிழ் ... எதிலும் தமிழ்!
பெயர் பலகைகளில் கண்டிப்பாக தமிழ்!!
சென்னையில் 
சாலையின் இருமருங்கிலும் 
வித விதமான பலகைகள் 
சில பலகைகளை இங்கே பெயர்த்து தந்திருக்கிறேன்
ஆங்கில பெயர்களை கண்டுபிடிக்க முடிகிறதா பாருங்கள்.
அதிகம் பெயர்த்தவருக்கு "பலகை செம்மல்" பட்டம் காத்திருக்கிறது!
( முதல் மூவருக்கு மட்டும் * போன்ற விதிகள் இல்லை... 
எத்தனை நபர்கள் சரியாக சொன்னாலும் அத்தனை பேருக்கும் பட்டம் உண்டு!)

ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்:
நொறுவைகள் 
அடுமனை 
அறைகலன்கள் 
குழைமம் 
வன்பொருளகம் 
எழுது பொருளகம் 
அருந்தகம் 
நகலகம் 
விரைவு/ துரித உணவகம்
மாற்றுத் திறனாளி
பிறந்த குழந்தைகள் 

கடைசி பெயர் பலகையை கண்டு நானும் அதிர்ந்தேன் 
உள்ளே சென்று ஆவலாக பணியாளரிடம் விசாரித்தேன்: 
"தொப்புள் கொடி அறுத்ததா, அறுக்காததா?"
பணியாளர்: 
 மன்னிக்கவும் இங்கே கிடைக்காது..
வேண்டுமென்றால் நுங்கம்பாக்கம் "இப்பொழுது பிறந்தது" கடையில் முயற்சிக்கவும்...

9/07/2010

'கடி'தம்

யப்பா !  தாங்கலியே ! 
இப்படியும் ஒரு சங்கமா? ! படியுங்க ஆனா ....
...(படித்த பழைய விஷயம்னா, just மலரும் நினைவுகள் மாதிரி ...)
  செருப்பு இல்லாம நாம நடக்கலாம்
    ஆனா,
    
நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது.

தீவிரமாக யோசிப்போர் சங்கம் (எங்களுக்கு வேறுஎங்கும் கிளைகள் கிடையாது)

என்னதான் மனுசனுக்கு வீடுவாசல்காடுகரைன்னுஎல்லாம் இருந்தாலும்,
 
ரயிலேறனும்னா,    ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும்இதுதான்வாழ்க்கை.
              பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும்.
                  ஆனா,
                  ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா?
                  நல்லா யோசிங்ககுவாட்டர் கூட வராது!!!      

 என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும்,
                  ஹீரோ ஹோன்டாஹீரோயின் ஹோன்டாஆய்டாது!!
                  அதேமாதிரி,
                  என்னதான் பசங்க வெண்டைக்காய் ாப்பிட்டாலும்,
                  லேடீஸ் ஃபிங்கர்ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது!!!

 டிசம்பர் 31க்கும்,
                  ஜனவரி 1க்கும்
                  ஒரு நாள்தான் வித்தியாசம்.
                  ஆனால்,
                  ஜனவரி 1க்கும்,
                  டிசம்பர் 31க்கும்,
                  ஒரு வருசம் வித்தியாசம்.
                  இதுதான் உலகம்.

  பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும்.
                  ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும்.
                  சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் ிக்கும்.
                  ஆனா...
                  கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா??
                  யோசிக்கனும்...!!

தத்துவம் 1:

                  
இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர்ஆகலாம்.
                  
ஆனா
                  
பிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆகமுடியுமா?

 தத்துவம் 2:

                  
ஆட்டோக்கு 'ஆட்டோ'ன்னு பேர் இருந்தாலும்,
                  
மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண ுடியும்.                 
 தத்துவம் 3:

                  
தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும்,
                  
ஆனா
                  
இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது!
                  (
என்ன கொடுமை சார் இது!?!)                 
 தத்துவம் 4:

                  
வாழை மரம் தார் போடும்,
                  
ஆனா
                  
அதை வச்சு ரோடு போட முடியாது!
                  (
ஹலோஹலோ!!!!)                 
 தத்துவம் 5:

                  
பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம்,
                  
ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா?
                  
இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்கமுடியுமா?
                  (
டேய்எங்க இருந்துடா கிளம்புறீங்க?!)                 
தத்துவம் 6:

                  
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்...
                  
சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும்,
                  
அதுக்காக,
                  
மன்டே அன்னைக்கு மண்டைய போட முடியுமா?
                 
                   
பில் கேட்ஸோட பையனா இருந்தாலும்,
                  கழித்தல் கணக்கு போடும்போது,
                  கடன் வாங்கித்தான் ஆகனும்.
                                  ராவெல்லாம் முழ்ச்சு கெடந்துயோசிப்போர் சங்கம்

            
கொலுசு போட்டா சத்தம் வரும்.
                  
ஆனா,
                  
சத்தம் போட்ட கொலுசு வருமா?                  
பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்,
                  ஃப்ரன்ட் வீல முந்த முடியாது.
                  இதுதான் உலகம்
                  
T Nagar போனா டீ வாங்கலாம்.
                  ஆனால்
                  விருது நகர் போனா விருது வாங்க முடியுமா?
                 
என்னதான் பெரிய
                  வீரனா இருந்தாலும்,
                  வெயில் அடிச்சா,
                  திருப்பி அடிக்க முடியாது.
     
இளநீர்லயும் தண்ணி இருக்கு,
                  பூமிலயும் தண்ணி இருக்கு.
                  அதுக்காக,
                  இளநீர்ல போர் போடவும் முடியாது,
                  பூமில ஸ்ட்ரா போட்டு உரியவும் முடியாது.
                 
உங்கள் உடம்பில்
                  கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும்,
                  ஒரு செல்லில் கூட
                  ஸிம் கார்ட் போட்டு பேச முடியாது.

                  
ஓடுற எலி வாலை புடிச்சா
                  நீ 'கிங்'கு
                  ஆனா...
                  தூங்குற புலி வாலை மிதிச்சா
                  உனக்கு சங்கு.
                  
நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம்
                  ஆனா
                  ஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க முடியாது.
                  
வண்டி இல்லாமல் டயர் ஓடும்.
                  ஆனால்...
                  டயர் இல்லாமல் வண்டி ஓடுமா?
                  
இது மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டியவிஷயம்.
                 
 சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா,
 ட்ரெய்ன் ஓட்டுறதுட்ரெய்னிங்கா
இல்ல    பிளேன் ஓட்டுறது பிளானிங்கா?
                  
என்னதான் நீ புது மாடல் மொபைல் வச்சிருந்தாலும்
                  
மெஸேஜ் Forwardதான் பண்ண முடியும்,
                  Rewind லாம் பண்ண முடியாது.

 (ஐயோஐயோ!! ஐயோ!!! காப்பாத்துங்க!!!)