12/17/2010

தமிழ் வாழ்க - ௨

வாழ்க தமிழ் - ௨

எங்கும் தமிழ் ... எதிலும் தமிழ்!
இன்றைய சென்னை மாணவர்களிடம் 
சில தமிழ் பழ மொழிகளை கொடுத்து
ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கச் சொன்னோம்.
ஒரு மொழியை பல மொழியாக பேசும் மாணவர்களுக்கு பழமொழி தெரியாதா? 
பெயர்த்துவிட்டார்கள் பெயர்த்து!
தமிழ் பழமொழிகளை கண்டுபிடிக்க முடிகிறதா பாருங்கள்.
அதிகம் பெயர்த்தவருக்கு "பழமொழிச் செம்மல்" பட்டம் காத்திருக்கிறது!
( முதல் மூவருக்கு மட்டும் * போன்ற விதிகள் இல்லை... 
எத்தனை நபர்கள் சரியாக சொன்னாலும் அத்தனை பேருக்கும் பட்டம் உண்டு!)

தமிழில் மொழி மாற்றம் செய்யவும்:
 
1. For good cow, one heat.
2. Bad donkey, small wall.
3. Five not bending, fifty also no bend.
4. For crow, its kutty gold kutty.
5. For elephant also leg slips.
6. Study handful dust size, no study world size.
7. Ant move, stone melt.

போதுமடா சாமி! 
அலை பேசியில் குறுந்தகவல் 
அனுப்பும் மாணவச் செல்வங்களே 
தமிழ் தகவல் நுண்பொருள் 
பக்கம் போய் பாருங்கள் 
நன்றாக தேர்ச்சி பெறுங்கள் 
அதுவரை ...
தமழ் தானாக வளரட்டும்!

No comments: